ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 6.2.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஏழு மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த தெலுங்கானா ஆளும் கட்சியான பிஆர்.எஸ் முடிவு.

தி டெலிகிராப்:

* ஹிண்டர்பர்க் அறிக்கையில் கூறப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளுக்கு சந்தை குழப்பம் மற்றும் உலகளாவிய எதிர்வினைகள் இருந்தபோதிலும், பிரதமர் அமைதி காப்பதை அடுத்து, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மோடியிடம் காங்கிரஸ் கட்சி தினமும் மூன்று கேள்விகளை எழுப்பும் என்று அறிவித்தார்.

* 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை டில்லி நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து, "தினசரி சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை" நிறுத்துமாறு காங்கிரஸ் மூத்த மற்றும் மேனாள் ஒன்றிய அமைச்சரான ப.சிதம்பரம் உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜாதிகள் அர்ச்சகர்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

* எதிர் கருத்துள்ள தலைவர்களுடன் சந்திக்க விரும்புவதாகவும் அதில் முதலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து  மதிய உணவு சாப்பிட விரும்புவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*'அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க வாரியம் அமைக்க வேண்டும்' என தமிழ் நாடு அரசுக்கு சி.பி.எம். மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment