குடியரசுத்தலைவரின் உரையா? பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையா? எதிர்க்கட்சிகள் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

குடியரசுத்தலைவரின் உரையா? பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையா? எதிர்க்கட்சிகள் கேள்வி

புதுடில்லி, பிப். 1- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை பா.ஜ.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை போல உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. 

முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று (31.1.2023) உரை ஆற்றினார். அவரது உரை குறித்து எதிர்க்கட்சி கள் கருத்து தெரிவித்துள்ளன. இதுபற்றிய பார்வை வருமாறு:-

மல்லிகார்ஜூன கார்கே 

(காங்கிரஸ் தலைவர்):-

ஒன்றிய அரசின் அறிக்கை, குடி யரசுத்தலைவர் வழியாக வந்திருக் கிறது. புதிதாக ஏதுமில்லை. நாடு பெருமளவில் முன்னேறி இருப்ப தாக அரசு கூறுகிறதே, பிறகு ஏன் வேலையில்லா திண்டாட்டம், அதிகபட்ச விலைவாசி உயர்வி னால் நாட்டின் ஏழைகள் தொடர்ந்து கஷ்டப்படுகிறார்கள்?

டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்):-

ஒன்றிய அரசு எழுதி அளிப் பதை குடியரசுத்தலைவர் பேசுவது வழக்க மானது. என்றாலும், இதில் விலை வாசி உயர்வைக் கட்டுப் படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, கூட்டாட்சியை (நிதி) வலுப் படுத்துவது, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவது, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறை வேற்றுவது என முக்கிய பிரச்சி னைகள் பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை.

பினாய் விஸ்வம் 

(இந்திய கம்யூ. மூத்த தலைவர்):-

பெண்களுக்கு, இளைஞர்க ளுக்கு, தலித்துகளுக்கு, பழங்குடியினருக்கு அதிகாரம் வழங்குதல் என்பது காகிதத்தில்தான் உள்ளது. குடியரசுத்தலைவர் உரையானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக் கான ஆளும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி போல உள்ளது. வார்த்தைகள் அழகா னவை. ஆனால் உண்மையில் அப் படி இல்லை. 

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment