வல்லம், பிப். 12- சென்னையில் நடைபெற்ற இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவில் பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நமது பல்கலைக்கழகத்திலிருந்து நாட்டு நலப்பணித்திட்ட இரண் டாமாண்டு இளங்கலை கணினி அறிவியல் பயிலும் மாணவி இனியவர்ஷினி இந்நிகழ் வில் கலந்து கொண்டார்.
டில்லியில் நடைபெற்ற குடி யரசு தின விழா அணிவகுப்பில் இளங்கலை வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண வர் அண்ணாமலை கலந்து கொண்டு பல்கலைக்கழகத்திற்கு நற்பெயரை யும், புகழையும் பெற்று தந்தார். பல்கலைக்கழகத்தின் சார்பாக இவ் விருவரையும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலு சாமி, பதிவாளர் பேராசிரியர் பூ.கு. சிறீவித்யா, கல்விப்புல முதன்மை யர், புல முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இவ்விரு மாணவர்களையும் பாராட்டினர்.
No comments:
Post a Comment