கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு

 

தமிழ்நாட்டு அறிவாளர்களையெல்லாம் கோவைக்குத் தமது ‘கல்வியகம்' மூலம் அறிமுகப்படுத்திய வரலாற்றுப் பெருமித வாழ்வுக்குரியவர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள்!

‘ஊரும் உலகும்' எனும் தமிழ், ஆங்கில இருமொழி இதழை நடத்திய சாதனையாளர். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளராகவும் 'விடுதலை' செய்திப் பிரிவிலும் பணிபுரிந்த பேராசிரியர் மானமிகு கு.வெ.கி. ஆசான் அவர்களின் அனைத்துப் பணிகளுக்கும்   உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர் சாரதாமணி அம்மையார்! அவினாசிலிங்கம் மனையியற் கல்லூரி பேராசிரியப் பணியை உதறிவிட்டு இணையரின் பணிகளுக்குப் பக்கத் துணையாக இருந்தவர் சாரதாமணி.

இணையரின் நினைவோடு அவர் பணிகளைத் தொடர்ந்த அம்மையார், முதுமை நலிவால் 11.2.2023 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

கடந்த 5ஆம் தேதி கோவை சென்றபோது கூடத் தொலைபேசி மூலம் அவரிடம் உரையாடினோம்!

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு, குறிப்பாக அவரது மகன் செந்திலுக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், இயக்கத்தவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் இன்று (12.2.2023) பிற்பகல் நடைபெற்றது.


                                                                                                                  கி.வீரமணி 

                                                                                                                    தலைவர், 

                                                                                                     திராவிடர் கழகம்  

                                                                                                                                            12.2.2023 

      


                                                                                         

       

 


No comments:

Post a Comment