ஆளுநர் ரவியின் அத்துமீறல் பேச்சு
சென்னை, பிப்.22 ‘காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது' என சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள் ளார்.
பாரதிய ஜன சங்கத்தின் தலை வராக இருந்த தீனதயாள் உபாத்யாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை அமைக்கப்பட் டுள்ளது. இதன் சார்பில் பேரா சிரியர் தர்மலிங்கம் தமிழில் மொழி பெயர்த்த தீனதயாள் உபாத்யா யாவின் புத்தகங்களின் தமிழாக்க நூல்களான 'சிந்தனை சிதறல்கள்' மற்றும் 'ஒருங்கிணைந்த மனித நேயம்' ஆகிய புத்தகங்களை தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை ராஜ்பவனில் நடை பெற்ற நிகழ்ச்சியில் நேற்று (21.2.2023) வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியா ஜாதி, இனம் என பிளவு பட்டுள்ளது. கடந்த 7 தலை முறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம். இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச் சாரம் மற்றும் மேற்கத்திய மன நிலையை பின்பற்றுவதே காரணம் ஆகும். பலர் இந்தியாவில் ஏழை களாக உள்ளதற்கும் அதுவே கார ணம். காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதி யுள்ளார். காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இதனால், இன்று மார்க்சின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது. நமது பேராசிரியர்கள் எப்போதும் அய்ரோப்பியர்களை உயர்த்திப் பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது. ஆபிரகாம் லிங்கன் அடி மைத்தனத்தை அமெரிக்க நலனுக் காக ஆதரித்தார். பெண்களுக்கான ஓட்டு உரிமையை ஆபிரகாம் லிங் கன் வழங்க மறுத்தார். அவரை ஜனநாயகத்திற்கான உதாரணமாக காட்டுகிறோம். இது தவறான முன்னுதாரணம். காலனி ஆதிக்க மனநிலையை முதலில் புறந்தள் ளுங்கள். மொழி, இனம் ஆகிய வற்றை வைத்து மக்களை பிரிக்க முடியாது. மக்கள் மிகுந்த கவனத் துடன் உள்ளனர். உலகின் பாதி நாடுகள் இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன. இது இந்தியாவின் வளர்ச்சியையும் வலிமையையும் எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச் சியில் திருவாரூர் மத்திய பல் கலைக்கழக துணைவேந்தர் கிருஷ் ணன், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மேனாள் தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment