சென்னை,பிப்.23- டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் அய். அம்பேத், சங்கப் பொதுச் செயலாளர் இ. இனியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவின் மிகச் சிறந்த பல் கலைக்கழகங்களில் ஒன்றும், ஆகச் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றுமான புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் "ரிசர் வேசன் கிளப்' என்ற சமூக நீதிக்கான மாணவர் அமைப்பு பல்வேறு பொது நல செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. அவ்வமைப்பின் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மற்றொரு மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் புகுந்து தகராறு செய்து தந்தை பெரியார், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் போன் றோருடைய படங்களை உடைத்த தோடல்லாமல் தமிழ்நாட்டு மாண வர்களை கடுமையாக தாக்கியிருக் கிறார்கள். இது வன்மையாக கண்டிக் கத்தக்கது. சனநாயக நாட்டில் ஒவ் வொருவருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமையுள்ளது. இச் சூழலில், இதுபோன்ற நிகழ்வுகள் மாற்று கருத்துடையவர்களின் குரல் வளையை நெரிப்பதாகும். இது சன நாயகத்திற்கு விரோதமான செயலா கும். இதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தி தவறிழைத்தவர்கள் மீது உட னடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அராஜக செயலை கண் டித்து உடனடியாக அறிக்கை வெளி யிட்டு மாணவர்களுக்கு பக்கபலமாக நின்ற திராவிட இயக்கத்தின் நம் பிக்கை பேரொளி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் வாழ்த் துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இனிமேல் இதுபோன்று தமிழ் மாணவர்கள் எங்கு பாதிக்கப்பட் டாலும் மனிதாபிமான அடிப் படையில் குரல் கொடுக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம்.
No comments:
Post a Comment