திருச்சி, பிப். 20- போக்குவரத்து நெரி சலைக்குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து திராவிடர் கழகம் நடத்திய மினி மாரத்தான் போட்டிகள் தமிழ் நாடு முழுவதும் 12.02.2023 அன்று பல்வேறு மாவட்டங் களில் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட் டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் 21 பேர், மாணவிகள் 52 பேர் என மொத்தம் 73 பேர் கலந்து கொண்டனர். இதில் மருந்தியல் பட்டயப் படிப்பு இரண்டா மாண்டு மாணவி கே.அய்ஸ் வர்யா ஏழாவது இடத்தையும், முதலாம் ஆண்டு மாணவிகள் சி.ஆர்த்தி, கே.சீலா முறையே 8 மற்றும் 9ஆம் இடங்களையும் பிடித்து பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சோதனைக் கூட ஆய்வாளர் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜி. விஜி 12ஆம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாரத்தான் போட்டி திருச்சி நீதிமன்ற சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து துவங்கி அண்ணா விளை யாட்டு அரங்க வளாகத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தொலை வில் நிறைவுபெற்றது. திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இம்மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment