சென்னை, பிப். 16- சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாகவும் எட்டாம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு படித்தவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி வேலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 17.2.2023 அன்று நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி அறிவித்துள்ளார். இதில் பணி நியமனம் பெற்றாலும் வேலை வாய்ப்பு பதிவு ரத்தாகாது என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment