காரைக்குடி, பிப். 20- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில், 16.2.2023 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் தலை மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியினர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டும், சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
அதனடிப்படையில், சிவ கங்கை மாவட்டத்தில் இன்றைய தினம் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழக்; கனவு நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணாக்கர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக் கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற் றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத் துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு, திறமை மிக்க சொற்பொழிவாளர்களைக் கொண்ட மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்றையதினம் இங்கு நடை பெற்று வருவது நம் அனைவ ருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும். இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழி காட்டி புத்தகமும், தமிழ் பெரு மிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்படவுள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழி காட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழிவாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துகளை உள் வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணாக்கர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment