பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுதில்லி, பிப்.5 - பொது சிவில் சட்டத்துக் கான சாத்தியக் கூறுகள் குறித்து 21-ஆவது சட்ட ஆணையம் ஆராய்ந்தது என்றாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய பாஜக அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் அரசின் நிலை பாடு குறித்து, மாநிலங்கள வையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு, கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக பதிலளித் துள்ளார். அதில், “பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விவ காரங்களை ஆராய்ந்து பரிந் துரைக்குமாறு 21-ஆவது சட்ட ஆணையத்துக்கு கோ ரிக்கை விடுக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பதவிக் காலம் 2018 ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிந்து விட்டதால் இந்த விவகாரம் 22-ஆவது சட்ட ஆணையத்திடம் உள்ளது. ஆகையால், பொது சிவில் சட்ட அமலாக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

22-ஆவது சட்ட ஆணை யம் 2020 பிப்ரவரி 21-ஆம் தேதி அமைக்கப்பட்டது. எனி னும், இந்த ஆணையத்திற் கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை கடந்த 2022 நவம்பரில்தான் ஒன்றிய அரசு நியமித்தது. இந்த நிய மனம் நடந்து மூன்று மாதங் களே ஆகும் நிலையில், ஆணையத்தின் பதவிக்கா லமே பிப்ரவரி மாத இறுதியில் முடிவ டைய உள்ளது என்பது குறிப்பிடத்தக் கது. இந்நிலை யில்தான் ஒன்றிய அரசு பொது சிவில் சட்ட அமலாக்கம், 22-ஆவது சட்ட ஆணையத்தின் கையில் உள்ளதாக மாநிலங்களவையில் பதி லளித்துள்ளது. நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டுவரப் படும் என்று 2014, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்த லில் பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. தற்போது 2024 மக்களவைத் தேர்தலின்போ தும் இதே வாக்குறுதியை பாஜக வழங்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment