காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்க சோதனையா? : பிரியங்கா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்க சோதனையா? : பிரியங்கா கண்டனம்

புதுடில்லி, பிப் 22 காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக் கத்துறை சோதனை நடத்திய போதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்பு வோம் என்று பிரியங்கா கூறி யுள்ளார். 

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கரில், நிலக்கரி கொண்டு செல்லவும், எடுத்து வரவும் 'மாமூல்' வசூலிக்கப்படுவதாக கூறப்படு கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை 20.2.2023 அன்று காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்தியது. இந்த நிலையில், இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அதானி, பங்குச்சந்தையில் மோசடி செய்ததாகவும், வேறு சில குற்றச் சாட்டுகளையும் சந்தித்து வரு கிறார். ஆனால் அவருக்கு எதிராக எங்காவது சோதனை நடந்ததாக பார்க்க முடிகிறதா? ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எதி ராக விசாரணை அமைப்புகளை பா.ஜனதா கட்டவிழ்த்து விட் டுள்ளது. சத்தீஷ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டை முடக்கவும், மோடி-அதானி தொடர்பை மேலும் எழுப்பக்கூடாது என்பதற்காகவும் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இருப்பினும், பணவீக்கம், வேலையின்மை, ஊழல் போன்ற நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை அச்ச மின்றி தொடர்ந்து எழுப்புவோம். காங்கிரஸ் மாநாட்டில் இதற்காக உறுதிமொழி எடுத்துக் கொள் வோம். கைப்பாவை அமைப்புகளை காட்டி நீங்கள் நாட்டின் குரலை ஒடுக்க முடியாது. அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை தொடர்ந்து கேட்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment