புதுடில்லி, பிப். 21- டில்லியில் பாபா அரிதாஸ் நகரில் வசித்து வரும் தாய் தனது 14 வயது மகளுக்கு பேய் பிடித்து விட்டது என நினைத்து பயந்து போயுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது மகளை பிடித்த பேயை விரட்டுவதற்கு பூஜைசெய்யவேண்டும் என்று கூறி சாமியாரை அணுகுமாறு கூறினர். இதனை அடுத்து அப்பகுதில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்த சாமியார் ஒருவரை அணுகி உள்ளார்.
இதுபோன்று அடிக்கடி சிறுமியை அழைத்து வரும்படி அந்த மந்திரவாதி கூறியுள்ளார். பேயை விரட்டுவதற்காக அவர் அப்படி கூறுகிறார் என நினைத்து, சிறுமியின் தாயாரும் அழைத்து சென்று உள்ளார். இந்த நிலையில் சாமியார் பூஜை செய்கிறேன் என்ற பெயரில் சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் இதை வெளியில் கூறினால் பேய் உன்னையும் உனது அம்மாவையும் கொன்றுவிடும் என்று கூறியுள்ளார் இதானால் பயந்துபோன சிறுமி, தாயிடம் எதுவும் கூறவில்லை. எனினும், மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் வருவதுபற்றி அறிந்த தாய் சிறுமியிடம் விசாரித்து உள்ளார். அதன்பின்பு, சம்பவம் பற்றி அறிந்து, அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக அவர், காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். இதனை அடுத்து, காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சாமியாரையும் அவருக்கு உதவிய நபர்களையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment