மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள்

* சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்போம்!

* புதிய உறுப்பினர்களைச் சேர்த்து மகளிரணி, மகளிர் பாசறையை வலுப்படுத்துவோம்

* அனைவருக்கும் பொதுவான ஒரே நீர்த்தொட்டியை அமைக்க வேண்டும்!

* பட்டியலின மக்களின் குடிநீரில் மலம் கலந்த கீழ்மையைக் கண்டிக்கிறோம்

சென்னை, பிப். 3- 30.1.2023 அன்று முற்பகல் சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் அணி, மகளிர்ப் பாசறைக் கலந்துரையாடலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் - 1: 

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோ ரின் மறைவுக்குப் பின், கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று, கழகத்தைச் சிறப்பாக நடத்தியதுடன், அம்மாவின் ஒப்புத லோடு தொடங்கப்பட்ட கழகத்தின் மகளிர் பிரிவை மேலும் வலுப்படுத்தி மகளிரணி, மகளிர் பாசறை என்ற இரு அமைப்பு களையும் திறம்பட நடத்திச் செல்ல, கழக மகளிருக்கு உறுதுணையாக இருந்துவரும் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 90ஆவது ஆண்டில்  அடியெடுத்து வைத்திருக்கும் மகிழ்ச்சிப் பெருக்கில், கழகத்தின் அனைத்து மகளிர் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் திராவிடர் கழக மகளிரணியும், திராவிட மகளிர் பாசறையும் தெரிவித்துக் கொள்கின்றன.

தீர்மானம் எண் - 2:

55 ஆண்டுகளுக்கு மேல் பெரியாரியலைத் தன் எழுத்து, பேச்சு, களப்பணி மூலம் பரப்பிவரும், பெரியாரியல் ஒன் றையே தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் “தந்தை பெரியார் விருது” பெற்றமைக்கு திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை சார்பில் பெரும் மகிழ்வையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறோம்.

தீர்மானம் எண் - 3:

பெண்கள் சமூகத்தின் வலுவற்ற பகுதியாகவே இன்றள விலும் கருதப்படுகிறார்கள். ஆண்களைப் போலவே பெண் களுக்கும் போதிய தற்காப்புப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்றுவிப்பது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று “திராவிட மாடல்” அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் - 4:

பாஜக இந்திய ஒன்றியத்தின் தலைமையினை ஏற்ற 2014ஆம் ஆண்டு முதல் வட இந்தியாவில் ஜாதி மத கலவரங்கள் அதிகரித்து விட்டன. இந்த நச்சுப் பாம்பு ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற நட்புணர்வுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் தன் விஷத்தைக் கக்குகிறது. அதன் விளைவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தைக் கலந்த கயவர்களின் செயல். இதற்கு திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பது டன் அக்குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். அப்பகுதியில் சமுத்துவ தன்மையுடன் கூடிய ஒரே பொதுத்தண்ணீர் தொட்டியை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் எண் - 5:

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான நெகிழி, இரசாயனக் கழிவுகள், ஊர்திப்புகை, அதிக ஒலி எழுப்புதல் போன்றவற்றால் ஏற்படும் நீர், நில, ஒலி மாசுக்கள் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்திட சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள புதிய மகளிரை உறுப்பினர்களாகச் சேர்த்து, கழக மாவட்டங்கள் தோறும் திராவிட மகளிர் சார்பில், ஒத்தக் கருத்துடையவர்களை இணைத்துக் கொண்டு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

மகளிர் வேலைத் திட்டங்கள்:

1. மகளிரணி மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்கள் மாதந்தோறும் குறைந்தது 5 மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் செய்து மகளிர் தோழர்களைச் சந்தித்து புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பது. சுற்றுப்பயணத்தின் போது மகளிர் தோழர்களைக் களப்பணிக்கு ஊக்குவிப்பதுடன், செல்லும் இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது.

2. புதிய மகளிரை உறுப்பினர்களாகச் சேர்த்து மகளிரணி மகளிர் பாசறை அமைப்புகளை பலப்படுத்துவது.

3. மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் தலைமையின் வழிகாட்டுதலுடன் துண்டறிக்கைகள் வெளியிட்டு கல்லூரி வாயில்களிலும் கடைவீதிகளிலும் அவற்றை வினியோகித்து.

4. மகளிர் மட்டுமே பங்கேற்கும் சிறப்புப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளைக் காணொலி வழியாக மண்டல வாரியாக நடத்துவது.

5. சுற்றுப்பயணம் செல்லும் இடங்களிலெல்லாம் “பெரியார் பிஞ்சு” மாத இதழுக்குச் சந்தாக்கள் சேர்ப்பது.

6. சமூக வலைத்தளங்களில் கழகத்தின் தொழில்நுட்ப அணியின் உதவியுடன் இயக்கக் கொள்கைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது.

7. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நிறைவை ஒட்டி கழக மகளிர் சார்பில் தலை மையின் ஒப்புதலுடன் மாநில மாநாட்டை நடத்துவது.

8. குழந்தைகளிடம் மதத்தையும் மூட நம்பிக்கைகளையும் பரப்பும் இடத்தில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள். அத்தகைய மூட நம்பிக்கைகளின் பிடியிலிருந்து பெண்களை விடுவிக்க அறிவியல் பிரச்சாரத்தினைக் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் மேற்கொள்வது.

9. மகளிர் உடல் நலம், மனநலம் காக்க  மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது.

10. தமிழ்நாட்டின் பள்ளி/கல்லூரிகளில் உரிய அனுமதி பெற்று, மாணவர்களிடையே விஞ்ஞான மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்க்கும் வகையில் கருத்தரங்கங்கள் நடத்துவது.

11. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் மண்டல வாரியாக ஆர்வமுள்ள மகளிர் தோழர்களுக்குப் பெரியாரியலைப் பேசவும் எழுதவும் பயிற்சி அளிப்பது.

12. ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாதந்தோறும் குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது.

13. வெளியூர்களிலிருந்து சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் வந்து படிக்கும் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களை அடையாளங்கண்டு கழக அமைப்பு களுக்குள் கொண்டு வர தேவையான முயற்சிகளை மேற் கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.


திராவிடர் கழக மகளிரணி மற்றும் 

திராவிட மகளிர் பாசறையின் பொறுப்பாளர்கள்

ச.இன்பக்கனி  

- துணைப் பொதுச் செயலாளர்

                                                         சே.மெ.மதிவதனி 

                                                   - மாநில அமைப்பாளர், 

                          திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை

                                                         தகடூர் தமிழ்ச்செல்வி

                           - மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி


                                     மண்டலச் செயலாளர்கள், திராவிடர்

 1) குடியாத்தம் தேன்மொழி

 2) கோவை கலைச்செல்வி 

3) சிவகங்கை மணிமேகலை சுப்பையா

4) மத்தூர் இந்திரா காந்தி

5) சென்னை இறைவி இறையன்

வழக்குரைஞர் பா மணியம்மை 

      - மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை


                   மண்டலச் செயலாளர்கள், திராவிட மகளிர் பாசறை:

1) கடலூர் ரமாபிரபா 

2) திருச்சி அம்பிகா கணேசன்

3) த.மரகதமணி

4) வழக்குரைஞர் தில்ரேஷ்

5) தர்மபுரி கோகிலா

(அனைத்து மண்டலச் செயலாளர்களுக்கும் உரிய மண்டலங்கள் தனியாக அறிவிக்கப்படும்)

                                  கழகக் காப்பாளர்கள்:

1) நாகர்கோவில் கிருஷ்ணேஷ்வரி

2) திண்டிவனம் விஜயலட்சுமி தாஸ்

3) சோழிங்கநல்லூர் சரஸ்வதி

4) வேலூர் கலைமணி பழனியப்பன்

5) வழக்குரைஞர் வீரமர்த்தினி

6) மருத்துவர் மீனாம்பாள்

7) சென்னை வெற்றிச்செல்வி 

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி)


No comments:

Post a Comment