பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் - வழக்குப் போடலாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் - வழக்குப் போடலாம்!

வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் - 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும்!

ஈரோடு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் -சில கட்சிகள் காணாமல் போய்விடும்!

திருவள்ளூர் - அரக்கோணத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

திருவள்ளூர், பிப்.16   பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் - வழக்குப் போடலாம்!  வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் - 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும் - ஈரோடு கிழக்குத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - தேர்தலுக்குப் பிறகு சில கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார்  திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (15.2.2023) திருவள்ளூர், அரக் கோணத்தில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்:  பி.பி.சி. நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறதே, இதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய ஆட்சி, இன்றைக்குப் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாவற்றையுமே தம்முடைய தாகக் கையகப்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம் - யார் யாரெல்லாம் உண்மைகளைச் சொல்லுகிறார் களோ அல்லது தங்களுக்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுகிறார்களோ  அவர்களுடைய பேச்சு, எழுத்து சுதந் திரத்தைப் பறித்து, குரல் வளையை நெரிக்க வேண்டும் என்ற அளவிலேதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். பி.பி.சி., குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தைப்பற்றி ஆவணப் படமாக வெளி யிட்டது என்று சொன்னால், அதை மறுத்து இவர்கள், அவர்கள்மீது வழக்குப் போடலாம்; அல்லது அது உண்மையில்லை என்பதற்கு இவர்கள் தரப்பில் விளக்கம் சொல்லலாம்.

ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, பி.பி.சி. நிறுவனத்தின்மீது வருமான வரித் துறையை ஏவி விடுகிறார்கள். இது அவர்களின் பலகீனத்தைத்தான் காட்டுகிறது.

எதிர்க்கட்சிகளின்மீது வருமான வரித் துறையை ஏவிவிடுவது, அவர்களுடைய கருத்து களுக்கு யார் மாறுபடுகிறார்களோ அவர்களின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் பறிமுதல் போன்றவை இருந்தால், இவை அத்தனைக்கும் பதில் சொல்லவேண்டிய காலம்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். இதற்கு சரியான பதிலை மக்கள் அளிப்பார்கள்.

நீண்ட காலமாக, நாடாளுமன்றம் கையகப் படுத்தப்படுத்தப்பட்டு விட்டது. போதுமான அளவிற்கு, தெளிவாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை.

சட்டமன்றங்களிலும் அப்படிப்பட்ட சூழல்கள்தான் இருக்கின்றன; பத்திரிகை உலக மும் அப்படி இருக்கிறது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய ஒரு திட்டத்தை அறிவிக்கவேண்டும்!

இன்னுங்கேட்டால், இனிமேல் வரக்கூடிய ஓர் ஆட்சி - ஒன்றியத்தில் அமைந்தால், வரு மான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.அய். போன்றவை சுதந்திரமாக, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய ஒரு திட்டத்தை அறிவிக்கவேண்டும் - அரசியல் கட்சிகள் இணைந்து இதற்கொரு முடிவு காணவேண்டும்.

இப்படி கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந் திரம் இல்லாதவர்கள் - நேரிடையாக சந்திக்க முடியாதவர்கள் - இந்த ஆயுதங்களை ஏவி விடு கிறார்கள் - இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்.

அரக்கோணம்

திருவள்ளூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு அரக்கோணத்திற்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

ஈரோடு தேர்தலில் 

காங்கிரஸ் வெற்றி பெறும்

செய்தியாளர்:  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் எப்பொழுது பிரச் சாரம் செய்யப் போகிறீர்கள்?

தமிழர் தலைவர்: நான்தான் பிரச்சாரத் தையே தொடங்கி வைத்தேன். கடந்த 3 ஆம் தேதி, தேர்தல் பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்கினேன்.

மிகப்பெரிய அளவில், பெருவாரியான வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட் பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் வெற்றி பெறுவது உறுதி!

இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு, சில கட்சிகள் காணா மல் போகும்; சில கட்சிகளை அடமானம் வைத்தவர்கள், அதை மீட்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உணர் வார்கள். ஈரோடு ஒரு திருப்பமாக இருக்கும்.

எப்பொழுதுமே ஈரோடு திருப்பத்தை உரு வாக்கக் கூடிய தத்துவம் என்பது எல்லோ ருக்கும் தெரியும்.

செய்தியாளர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநராக நியமித் திருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த வர் என்பதில் நமக்கு மகிழ்ச்சி.

அதேநேரத்தில், நல்ல அளவிற்கு அரச மைப்புச் சட்ட ரீதியாக, ஒரு கட்சி சார்பில் லாமல், பொது நிலையில் இருக்கக் கூடிய அணுகுமுறையோடு, பதவியை - அரசமைப்புச் சட்டத்தை மதித்து அதன்படி நடக்கவேண்டும்.

அரசியல் செய்யாமல், ஆளுநரின் கடமை யைச் செய்யவேண்டும் என்பதையும் அவருக்குச் சொல்லியிருக்கிறோம்.

ஆகவே, அவர் அப்படி இருந்தால், அது தமிழர்களுக்குப் பெருமை - தமிழ்நாட்டிற்குப் பெருமையாகும்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment