புதுடில்லி, பிப்.2- கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் பிணை மனு தொடர்பான விவகாரத்தில், குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மிகப்பெரிய மத வன்முறை அரங்கேற்றம்
கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, குஜராத் மாநி லம் கோத்ராவில் கரசேவகர்கள் வந்த 2 ரயில் பெட்டி களில் தீ பற்றியதில், 59 பேர் உயிரிழந்தனர். இந்த சம் பவத்தைத் தொடர்ந்தே குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய மதவன்முறை அரங் கேற்றப்பட்டது. ஆயிரக்கணக் கானோர் கொல்லப்பட்டனர். பாலியல் வன் கொலைகள், வீடுகள், கடைகள் சூறை யாடல் சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, ரயில் பெட்டி எரிக்கப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 31 பேர்களில், சிலர் தங்களுக்கு பிணை கோரி, அண்மையில் உச்சநீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு 30.1.2023 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், குஜராத் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட் டார்.
அவர், “ரயில் பெட்டி எரிக் கப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெட்டி மீது தாங்கள் கற்களை மட்டுமே வீசியதாக பிணை கோரியுள்ள குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பயணிகளை வெளியே வர முடியாதபடி செய்து பெட்டிக்குத் தீவைத்து கற்களை வீசினால், அந்தச் செயலை கல்வீச்சாக மட்டும் கருத முடியாது; எனவே, பிணை வழங்கக் கூடாது” என்று எதிர்ப்புத் தெரி வித்தார்.
இதனைத் தொடர்ந்து பிணை மனுக்கள் தொடர்பாக பதிலளிக்கு மாறு குஜராத் அரசுக்கு தாக்கீது பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத் துள்ளனர்.
No comments:
Post a Comment