தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை

சென்னை, பிப். 16-  தமிழ் நாட்டில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மய்யங்களி லேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக அளவில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்த படியாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குதான் பெண் கள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொருத்த வரை ஆண்டு தோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கர்ப் பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகத்  தரவு கள் தெரிவிக்கின்றன. இதைய டுத்து பெண்களுக்கு வள ரிளம் பருவத்திலேயே தடுப் பூசியை செலுத்தும் திட் டத்தை ஒன்றிய அரசு நடை முறைப்படுத்த முடிவு செய்தது.

அதன்படி, எச்பிவி எனப் படும் அந்த தடுப்பூசியை முதல் கட்டமாக தமிழ்நாடு, கருநாடகம், மிசோரம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா ஆகிய மாநி லங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலை யில் இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந் தப்பட்ட பள்ளிகளிலும் இது குறித்த தகவல்களை கேட்டி ருக்கிறோம். ஒன்றிய அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப் பட்ட பின்னர், அதனை முறையாக குளிர்ப்பதன முறையில் பாதுகாத்து பயனா ளிகளுக்கு அவர்களது பள்ளி கள், அங்கன்வாடி மய்யங்களி லேயே வழங்கத் திட்டமி டப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டம் ஆரம்ப நிலையில் இருப்ப தால் அதற்கான வழிகாட்டு தல்கள் இன்னமும் வெளியிடப்பட வில்லை. விரைவில் அது குறித்த விரிவான அறிவு றுத்தல்கள் மாவட்ட சுகா தார அதிகாரிகளுக்கு வழங் கப்படும். தடுப்பூசி திட்டங் களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதற்குத் தேவையான எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

கரோனா தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கர்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப் படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment