உலக மகளிர் நாள் மார்ச் 8-இல் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

உலக மகளிர் நாள் மார்ச் 8-இல் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

சென்னை,பிப்.23- மகளிருக்கான பிரத்யேக கொள்கையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளார். 

அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல் வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

மாநில மகளிருக்கான கொள்கை வரைவு 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப் பட்டது. அதில், "பெண் களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம் பாடு, திறன் வளர்த்தல், பாது காப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெற அவர்களைத் தயார்படுத்தவும், உரிமை பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"வாழ்ந்து காட்டு பெண்ணே' என்ற திட்டம் மூலம் மகளிர் வங்கி தொடங்கப்பட்டு பெண் களுக்கு தேவையான கடனுதவி வழங்குவது, மகளிர் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றங்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பெண்கள் தலைமைப் பொறுப்பில் பணி யாற்ற நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட அம்சங்களும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

பெண் கல்வி இடைநிற்றலைக் குறைப்பது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆயிரம் பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது போன்றவை மகளிர் கொள்கையின் முக்கிய இலக்காகும். வரைவு கொள்கையில் பல்வேறு திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்ட பிறகு, இப்போது, மாநில மகளிர் கொள்கை முழு அளவில் தயாராகி உள்ளது. இந்தக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளார். அன்றைய தினம், பன்னாட்டு மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment