தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 878 உறுப்பு மாற்று சிகிச்சைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 878 உறுப்பு மாற்று சிகிச்சைகள்

சென்னை பிப் 21  உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் கடந்த 14 ஆண்டுகளில் 9,655 உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 878 உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

அவற்றில் அதிகபட்சமாக சிறுநீரகமும்,   அதற்கு அடுத்தபடியாக கருவிழிப் படலம், கல்லீரல் ஆகியவையும் உறுப்பு மாற்று சிகிச் சைக்காக கொடையாகப் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணை யம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டி லேயே தமிழ்நாட்டில்தான் முதல்முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன் காரணமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழ்நாடு விளங்கி வருகிறது. அதனால் தான், தொடர்ந்து உடல் உறுப்பு கொடை யில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. மூளைச் சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதனடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதி களின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 1,615 கொடையாளர் களிடமிருந்து 9,655 உறுப் புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 2,884 சிறுநீர கங்களும், 2,392 கருவிழிப் படலங்களும், 1,485 கல்லீரல்களும், 965 இதய வால்வுகளும், 753 இதயங்களும், 735 நுரையீரல்களும் கொடையாகப் பெறப் பட்டுள்ளன. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் மறுவாழ்வு பெற்றுள் ளனார். உடல் உறுப்புகளை பயனாளி களுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனை களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப் படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment