வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 ஆகும். அவர்களில் ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327. பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648. மூன்றாம் பாலினத்தவர் 275. இவர்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக உள்ளனர். இந்த வயதைச் சேர்ந்தவர்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278 பேர். 18 வயதுக்குக் குறைவானவர்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும் உள்ளனர். 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 675 ஆக உள்ளது. ஒட்டுமொத்த பதிவுதாரர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 48 ஆயிரத்து 149 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment