மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு

சென்னை, பிப்.24 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாத வரம் - கெல்லீஸ் வழித் தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறை வடைந்துள்ளது. 

சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில்  மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடமான மாதவரம் - சிறுசேரி சிப்காட் 3-ஆவது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. 

சுரங்கப்பாதையில் 29 நிலையங்களும், உயர் மட்ட பாதையில் 20 நிலையங்களும் என மொத்தம் 49 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில், முதல் சுரங்கம் துளை யிடும் பணி மாதவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை - கெல்லீஸ் பாதையில் தற்போது 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாத வரம் - கெல்லீஸ் வரை 9 கி.மீ. தொலைவுக்கு சுரங் கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இருமார்க்கமாக மொத் தம் 18 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மொத்தம் 18,551 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண் டும். இதில் தற்போது வரை 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. மாதவரத்தில் சுரங்க ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முராரி மருத்து வமனை, பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புரசைவாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அடர்த்தி அதிக முள்ள இப்பகுதியில் எவ்வித தொந்தரவும் இன்றி சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள் ளப்படுகிறது. பெரும்பாலான பணிகள் இரவில் நடைபெறுகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 18 முதல் 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment