விப்ரோ ஊழியர்களின் ஊதியத்தை 50% வரை குறைக்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

விப்ரோ ஊழியர்களின் ஊதியத்தை 50% வரை குறைக்க முடிவு

புதுடில்லி, பிப்.22 இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறு வனமான விப்ரோ, ஏற்கெனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் ஊதி யத்தை குறைக்க முடிவு செய் துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத் தில் 50 சதவிகிதம் வரை குறைக்கப் படும் என அறிவித்து உள்ளது.

கரோனா பேரழிவுக்குப் பிறகு, பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.  கூகுள், மைக்ரோ சாப்ட், டுவிட்டர், ஸ்விக்கி, அமேசான்’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் முன் னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும், தன் ஊழியர்களை கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்தது. முதல் கட்டமாக 450 பேரை பணி நீக்கம் செய்யும் போது  விப்ரோ, "தனது நிறுவனத்துக்கு  வாடிக்கையாளர் களிடையே உயர்வான தர மதிப்பீடு உள்ளது. இதற்கு ஏற்றவாறு ஊழியர்கள் நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டியது அவசியம். இதற்காக பணியாளர்களுக்கு பயிற் சிகள் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாத பணியாளர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என கூறியது. 

இருந்தாலும், வரும் ஆண்டு களில் ‘கேம்பஸ் இண்டர்வியூ’ எனப்படும் வளாக தேர்வு வாயிலாக பணியாளர்கள் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில்,  தற்போது, புதியவர்களின் ஊதி யத்தை 50 சதவீதம் குறைத்து, ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பள தொகுப்பை வழங்கும் என விப்ரோ அறிவித்து உள்ளது. விப்ரோ முதலில் புதியவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் வரை ஆண்டு ஒன்றுக்கு பேக்கேஜ் வழங்குவதாக உறுதியளித் தது, இப்போது அது ஆரம்பத்தில் வழங்கியதை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவான ஊதியத்திற்கு அவர்களைப் பணியில் இணையு மாறு கேட்டுக் கொள்கிறது.


தமிழ்நாட்டில் புதிதாக 

9 பேருக்கு கரோனா

சென்னை பிப்.22 தமிழ்நாட்டில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 4, பெண்கள் 5 என மொத்தம் 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 

சென்னையில் 2 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 94,791 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 56,689 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் தற்போது 53 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment