ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: பகல் ஒரு மணிவரை 44.56 சதவிகித வாக்குகள் பதிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: பகல் ஒரு மணிவரை 44.56 சதவிகித வாக்குகள் பதிவு!

ஈரோடு, பிப்.27 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் இன்று (27.2.2023) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் பகல் ஒரு மணிவரை 44.56 சத விகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் ஒரு மணி வரை 6 மணிநேரத்தில் 44.56 சதவிகித வாக்கு கள் பதிவாகியுள்ளன. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.


No comments:

Post a Comment