பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார்
திருச்சி,பிப்.9- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 43ஆவது ஆண்டு விழா 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில், பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார். பள்ளியின் NCC,NGC,JRC, SCOUT AND GUIDE,CUB AND BULBUL அணிகளை சார்ந்த மாணவர்கள் சிறப்பு அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், பள்ளியின் முதுகலை வேதியியல் ஆசிரியர் ஏ.நிர்மலா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற் றார். பள்ளியின் முதல்வர், டாக்டர் க.வனிதா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்து மாண வர்களின் பல்துறை சாதனைகளைப் பட்டிய லிட்டார்.
தாளாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை யாற்றி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு கல்வித்துறை பல சிறப்பான திட்டங் களுடன் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் அதற்கு அமைச்சர் அவர்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்றி வருவதாகவும் எடுத்துரைத்தார்.
அமைச்சர் உரை
நிகழ்வில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: மற்ற மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு அவர்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து அதை வளர்ப் பதற்கு உரிய முயற்சிகளை செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தினார். காலையில் ஈரோட்டில் தந்தை பெரியாரின் பேரனுக்கு வாக்குகள் சேகரித்து விட்டு மாலை பெரியாரின் கொள்ளுப் பேரன் களையும், பேத்திகளையும் பார்ப்பதற்கு வந்தது உண்மையிலே மகிழ்ச்சி தருவதாக நெகிழ்ச் சியுடன் பேசினார். மேலும் கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டியதோடு முத்தாய்ப்பாக மாணவர்கள் நடத்திய 'வழி பிறந்தது' என்னும் நாடகம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழி காட்டுதலில் செயல்படுத்தும் பல்வேறு திட்டங் களை எளிய முறையில் மக்களுக்கும் மாணவர் களுக்கும் விளக்குவதாக அமைந்ததற்கு தனிப் பட்ட முறையில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
பரிசு - கேடயம் வழங்கல்தொடர்ந்து, 100% தேர்ச்சி விழுக்காடு கொடுத்த பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக் கும், ஒன்பதாண்டுகளாகப் பள்ளியில் சிறப் பாகப் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களுக்கும் ஊக்கப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும், கடந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில், பள்ளியில் முதல் மூன்று இடங் களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்வில், எல்கேஜி, யுகேஜி முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாண விகளின் ஒயிலாட்டம், மயிலாட்டம், மேற்கத்திய நடனம், மற்றும் பெண்ணுரிமை போற்றும் பாடல், தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க கூடிய பாடல்களுக்கு நடனம் மற்றும் நாடகம் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின், இறுதியாகப் பள்ளியின் முதுகலை வணிகவியல் ஆசிரியையும், 43ஆம் ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.பிரியா நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment