புதுடில்லி,பிப்.5- பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதி லளிக்க உத்தரவிட்டு ஒன் றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கி ழமை தாக்கீது அனுப்பி உள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் 'இந்தியா-மோடிக்கான கேள்விகள்' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்தப்படத்தினை திரையிடுவதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மூத்த பத்திரிக் கையாளர் என்.ராம், வழக்குரைஞர் பிரசாந்த் பூசன், திரிணாமூல் காங் கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அதேபோல் இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் பி.எல்.சர்மாவும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள்
சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, "இந்த மனுக்க ளுக்கு மூன்று வார காலத் திற்குள் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பி யுள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தின் தடைக்கான உண்மை யான ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி கள் அமர்வு,"நாங்கள் தாக்கீது அனுப்புகிறோம். அதற்கு மூன்று வாரங்க ளுக்குள் பதில் அளிக்கப் படும். அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் வழக்கில் இணைந்து கொள்ளுங் கள் என்று தெரிவித் தனர். இந்த வழக்குகளின் மறுவிசாரணை ஏப்ரல் மாதத்திற்கு பட்டியலி டப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒன்றிய அரசு ஜனவரி 21 ஆம் தேதி, தகவல் தொழில் நுட்ப விதிகள் 2021இன் கீழ், அவசரகால வழிமு றைகளை பின்பற்றி, 'இந் தியா-மோடிக்கான கேள்விகள்' என்ற சர்ச் சைக்குரிய பிபிசி ஆவணப் படத்தின் இணைப்பு களை யூடியூப், ட்விட்டர் தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment