அமைதிக்கான நோபல் பரிசு 305 பெயர்கள் பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

அமைதிக்கான நோபல் பரிசு 305 பெயர்கள் பரிந்துரை

சுவீடன், பிப்.23 நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளதாவது: 2023-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைப்பதற்கான இறுதி கெடு பிப். 1-ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அந்தத் தேதிக்குள் 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 212 நபர்களின் பெயர்களும், 93 அமைப்புகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இது, கடந்த 2019க்குப் பிந்தைய மிக குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 343 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. தொடர்ந்து 8 ஆண்டுகளாக, அந்தப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300அய்த் தாண்டியுள்ளது என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment