சென்னை, பிப்.1- சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 30 ஆயிரம் தெருக்களில் புதிய பெயர்ப் பலகை வைக்கப் படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை நகரில் போக்கு வரத்து சந்திப்புகள் மற்றும் தெரு முனைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உத வியாக உள்ளன.
ஆனால் பல இடங் களில் இந்த வழிகாட்டி பெயர்ப் பலகைகள் சேதம் அடைந்து அல்லது மங்கலாக காட்சி அளிக்கிறது. இதனால் செல்ல வேண்டிய இடம் தெரியாமல் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் 30 ஆயிரம் தெருக்களில் சேதமடைந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டு புதிய பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு ரூ.8.7 கோடி செலவில் 8 ஆயிரம் பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்ப் பலகைகளை மாற்றும் பணி படிப்படியாக நடை பெறும். புதிய பெயர்ப் பலகை கள் ஆடம்பரமாக சிங்கார சென்னை 2.0 இலச்சினையுடன் காணப்படும். இரவிலும் பெயர் தெளிவாக தெரியும் வகையில் முப்பரி மாண தோற்றத்துடன் இவை தயாரிக்கப்படு கின்றன.
ஒவ்வொரு பெயர்ப் பலகையின் விலையும் ரூ.4,500 ஆகும். அவை டிஜிட்டல் முறை யில் அச்சிடப்படுவதால் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பெயர்ப் பலகை களை விட இது தரமா னது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment