திருப்பத்தூர், பிப். 1- திருப்பத்தூர் மாவட்ட மேனாள் மாவட்ட தலைவர் "சுயமரியாதைச் சுடரொளி" கே.கே.சின்னராசுவின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு 30.01.2023 காலை 7.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை சுடரொளி ஒளிப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், காமராஜர் அறக்கட்டளை தலைவர் கணேஷ்மல், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வ.கண்ணதாசன், ரொட்டேரியன் புரட்சி, மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜய் அன் பழகன், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன், மண்டல இளைஞரணி தலைவர் எ. சிற்றரசு, மாவட்ட மகளிரணி தாமரை, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கற்பகவள்ளி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சபரிதா, கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலை வர் எஸ். சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் புகழ், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், சுந்தரம்பள்ளி ஒன்றிய தலைவர் சங்கர், கந்திலி ஒன்றிய செயலா ளர் நாகராசன், சோலையார் பேட்டை ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் ஏ.டி.ஜி. சித்தார்த்தன், ஏ.டி.ஜி. இந்திரஜித், நகர இளைஞரணி பொறுப்பாளர் பிரேம்நாத், அக்ரிஅரவிந்த்,பெரியார் செல்வம், என்று ஏராளமான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment