காரல் மார்க்ஸை அவமதிக்கும் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தமிழ்நாடு முழுவதும் பிப்.28இல் ஆர்ப்பாட்டம் இரா.முத்தரசன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

காரல் மார்க்ஸை அவமதிக்கும் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தமிழ்நாடு முழுவதும் பிப்.28இல் ஆர்ப்பாட்டம் இரா.முத்தரசன் அறிவிப்பு

சென்னை,பிப்.23-  தமிழ்நாடு ஆளுநரின் அத்து மீறலை எதிர்த்து கண்டன முழக்கம் 28.2.2023 அன்று நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,

தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என். ரவி, அரசியல் அழைப்புச் சட்டத்தை அலட்சியம் செய்தும், அத்துமீறியும், சிறுமைப்படுத்தியும் செயல்பட்டு வருவதை ஒட்டுமொத்த மக்களும் கண்டித்து வருகின்றனர்.

அரசியலமைப்பு அதிகாரப் பொறுப்பில் இருந்துவரும் ஆளுநர், அரசியல் கட்சியின் சேவகராக செயல்பட்டு வருவது எதிர்மறை நடவடிக்கையாகும். அண்மைக் காலமாக கம்யூனிஸ்டுகள் மீதும், காரல் மார்க்ஸ் குறித்தும் விசமத்தனமான கருத்துக்களை தெரிவித்து ஆத்திர மூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் அமைப் புச் சட்டத்தின் அடிப்படைப் பண்பான மதச்சார்பின் மையை தகர்த்து, இந்தியாவும் மதம் சார்ந்த நாடு தான் என பேசி வருகிறார். ஆளுநரின் நடவடிக்கை எல்லை மீறி சென்று தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர் குலைத்து வருகிறார். ஆளுநரின் அத்துமீறல்களை கண்டிக்கும் முறையில், கட்சி அமைப்புகள் மாவட்ட வட்ட, வட்டார அளவில் வரும் 28.2.2023 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment