லக்னோ,பிப்.23- உத்தர பிரதேசத்தில் 2023-_2024 நிதியாண்டுக்கான நிதி அறிக்கை 22.2.2023 அன்று தாக்கல் செய்யப் பட்டது. 2025-இல் நடை பெறும் மகா கும்ப மேளாவின் முன்னேற் பாடு பணிகளுக்காக ரூ.2,500 கோடியை உத்தரப் பிரதேச மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். 12 ஆண்டுக ளுக்கு ஒரு முறை நடை பெறும் மகா கும்ப மேளா நிகழ்வு 2025-ஆம் ஆண்டில் நடைபெறு கிறது. இந்த நிகழ்வின் முன்னேற்பாடு பணி களுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவ தாக அமைச்சர் அறிவித்தார். நடப்பு நிதி யாண்டுக்கான (2022-_2023) பட்ஜெட்டில் ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்து அவர் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயில் மூலம் சுற்றுலா வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது. இதற்காக 3 சாலைகளை அகலப்படுத்தி அழகுப் படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டில் முடிவடையும்.
கடந்த 2022-இல் 24 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உத்தர பிரதேச மாநிலத் துக்கு வருகைப் புரிந்துள் ளனர். இவர்களில் 4 லட்சம் பேர் வெளிநாட்டு பயணிகள் என அவர் தெரிவித்தார்.
பவுத்தத்தை மய்யமாகக் கொண்ட சுற்று லாவை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment