டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மதவெறியர்களால் தந்தைபெரியார் உருவப்படம் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் சென்றார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார். பிறகு, மாணவர்களுடன் நடந்தே பல்கலைக்கழக கழக துணை வேந்தர் அலுவ லகத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அலுவலர்களிடம் தமது கண்டனத்தை தெரிவித்து, இந்நிகழ்வு குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாணவர்களையும் சந்திக்க வைத்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலைபேசியில் காணொலி வாயிலாக மாணவர்களிடம் கலந்துரையாடி ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவாவினரின் வன்முறை, தாக்குதல்குறித்த விவரங்களைக் கேட்டு, மாணவர்களுக்கு ஆறுதலைக் கூறி தமிழ்நாட்டின் ஆதரவை தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு தங்களுக்கு அளித்துவருகின்ற பேராதரவுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். செந்தில்குமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment