பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட விழா 2023 பிப்.20இல் தொடங்கிய விழா பிப்.28இல் முடிகிறது
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட விழா 2023 பிப்.20இல் தொடங்கிய விழா பிப்.28இல் முடிகிறது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் பிப்.20 முதல் நாள்தோறும் மாலை 5.30 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரை பன்னாட்டளவில் சமூக அக்கறையுடன் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
இப்படவிழாவில் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்-அம்பத்தூர், அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி-வியாசர்பாடி, கிறிஸ்த்தவ மகளிர் கல்லூரி (மாணவர் மட்டும்), டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி (மாணவர் மட்டும்), ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், எல்.விபிரசாத் பிரிவியூ திரையரங்கம், சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
இன்று (23.2.2023) மாலை 5.30 மணி
அனந்தா சஃபோ இயக்கத்தில் வெளியான பிரான்சு நாட்டின் ஆவணப்படம் Sex Relish (A solo orgasm), தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் வெளியான Cheepataka dumpa குறும்படம், இயக்குநர் அபீர்கான் இயக்கிய HOW DO I SHOW THE OCEAN SPACE YOU CARRIED INSIDE YOU? ஆவணப்படம், சித்தார்த்தா மோரே இயக்கத்தில் Clowning with Shakespeare ஆவணப் படம், ரஷ்யக் கூட்டமைப்பு சார்பில் அன்னா கோர்யா கோவ்ட்சேவா இயக்கத்தில் The Caring Women of Udora ஆவணப்படம், ஜப்பான் நாட்டின் அத்சுஷி கடோவாகி இயக்கத்தில் Strangers in Sendai - Andi and Me ஆவணப்படம் திரையிடப் படுகிறது.
24.2.2023 மாலை 5.30 மணி
வினோத் ராஜா இயக்கத்தில் Mahua Memoirs ஆவணப்படம், அமெரிக்க நாட்டிலிருந்து விக்டோரியா புரூஸ் இயக்கத்தில் Las Abogadas: Attorneys on the Front Lines of the Migrant Crisis ஆவணப்படம்
25.2.2023 மாலை 5.30 மணி
எத்தியோப்பியா நாட்டிலிருந்து இ வூ இயக்கத்தில் Fikirte ஆவணப்படம், ஆஸ்திரியா, மெக்சிகோவிலிருந்து ஃபெர்னாண்டோ ரொமேரோ-ஃபோர்ஷூபெர், பாப்லோ சனான் இயக்கத்தில் A Pain in the Neck ஆவணப்படம், ஸ்பெயின் நாட்டிலிருந்து ரோசா லோயிர் இயக்கத்தில் Anwar ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
26.2.2023 அன்று மாலை 5.30 மணி
அமெரிக்க நாட்டிலிருந்து வெலைன் பர்ரெனாஸ் ஷிம்மிசு இயக்கத்தில் 80 YEARS LATER ஆவணப் படம், ஆசாஃப் கலே இயக்கத்தில் The Adventures of Saul Bellow ஆவணப்படம், கனாடாவிலிருந்து ஜெரே மியா ஹாய்ஸ் இயக்கத்தில் Dear Audrey ஆவணப்படம்
27.2.023 அன்று மாலை 5.30 மணி
ஆதித்யா வர்மா இயக்கத்தில் Entrance Exam ஆவணப்படம், சந்தீப் ரவீந்திரநாத் இயக்கத்தில் Anthem for Kashmir இசைக்காட்சிப்பதிவு, அஜய் ரெய்னா இயக்கத்தில் At the Moment of Death ஆவணப்படம்
28.2.2023 மாலை 5 மணி நிறைவு விழா, விருது வழங்கல்
சோமீதரன் இயக்கத்தில் ‘தாய்நிலம்' ஆவணப்படம், எராஸ் சாமன் இயக்கத்தில் In A Dissent Manner ஆவணப்படம், ஆஸ்திரியா, சீனா ஆவணப்படமாக எல்லா ராய்டெல் இயக்கத்தில் A Pile of Ghosts ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
அனைவரும் வருக!
- பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம்
No comments:
Post a Comment