தமிழர்களை அடித்துத் துரத்தும் காட்சிப் பதிவு திருப்பூரில் ஹிந்திக்காரர்கள் 2 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

தமிழர்களை அடித்துத் துரத்தும் காட்சிப் பதிவு திருப்பூரில் ஹிந்திக்காரர்கள் 2 பேர் கைது

திருப்பூர், பிப். 1 திருப்பூர் வாலி பர்களை விரட்டி தாக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் அனுப்பர் பாளை யத்தை அடுத்த திலகர்நகர் பகுதி யில் உள்ள பனியன் நிறுவனத்தின் முன்பு வடமாநில தொழி லாளர்கள் ஏராளமானோர் தமிழர்கள் 4 பேரை ஓட, ஓட விரட்டி தாக்குவது போன்ற   காட்சிப் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங் களில் வைரலாக பரவியது. 

வடமாநில வாலிபர்கள் கையில் கல், பெல்ட், கம்பிகளைக் கொண்டு தமி ழர்களைதாக்க முயற்சிக்கும் அந்த காட்சிகள் திருப்பூர் மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணை யில், கடந்த 14-ஆம் தேதி ஒரு பேக்கரியில் வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் நடை பெற்றது தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பல் வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தது. 

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநி லத்தை சேர்ந்த ரஜத் குமார் (வயது 24), பரேஷ்ராம் (27) ஆகிய 2 பேரை 15 வேலம் பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தனிப் படை காவலர்கள் தேடி வருகின்றனர்.    தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது செய் யப்பட்டபின் தற்காலிகமாக அங்கு அமைதி நிகழ்ந்து வருகிறது.


No comments:

Post a Comment