சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், ஜெயங்கொண்டம், தாம்பரம், பழநி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம், அருப்புக்கோட்டை ஆகிய, 19 இடங்களில் உள்ள, அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என, சட்டமன்றத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித் தார். அதன்படி, 19 அரசு மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment