ஜெயங்கொண்டம் - பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

ஜெயங்கொண்டம் - பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா

ஜெயங்கொண்டம், பிப். 26- ஜெங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24.2.2023 அன்று மாலை சரியாக 6:00 மணிக்கு 16ஆம் ஆண்டு விழா இனிதே தொடங்கியது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர்  ஜெ. ராஜா கலந்து கொண்டார்.  

பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக மண்டல செயலாளர் சி.காமராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு  விழாவினை  சிறப்பித்தனர். 

மொழி வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.விருந்தினரை வரவேற்று பதினொன்று  மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினர். 

எல்கேஜி முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும்  மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். 

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் எழுச்சிமிக்க பெரியாரின் கருத்துக்கள் நிறைந்த பாடலுக்கு நடனம் ஆடினர். மேலும் அறியாமையை நீக்கி பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் பல்வேறு நாடகங்களை நடித்துக் காட்டினர்.

 பள்ளியின் முதல்வர் முனைவர் சசிதா 2022-2023ஆம் ஆண்டில் பள்ளியில் நடைபெற்ற சிறப்பான கல்வி சார்ந்த செயல்பாடுகள் பற்றியும் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில்  கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியதையும் ஆண்டறிக்கையின் மூலம் வழங்கினார். பள்ளியின் தாளாளர் அவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பத்து மற்றும் 12 ஆம் வகுப்பில் அரசு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும், பெரியார் பள்ளியில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சிறப்பாக பணி செய்து வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கி சிறப்பு செய்தார்.  

நிறைவாக நன்றி உரை, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment