வெட்டிக்காடு, பிப். 1- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா 28.1. 2023 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்றது.
வெட்டிக்காடு தலைவர் ரேவதி மைனர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருஞானம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பள்ளியின் ஆசிரியர் த. சாந்தினி வரவேற்புரை வழங்கினார் பள்ளி முதல்வர் சி.சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினரை பொன்னாடை அணிவித்து பள்ளி முதல்வர் சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர் வெட்டிக்காடு தலைவர் ரேவதி மைனர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருஞானமும் சிறப்புரையாற்றினார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் பரதநாட்டிய நடனத்துடன் விழா இனிதே நடைபெற்றது.
பள்ளியில் பயிலும் மழலையர் பிரிவு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சி களை வழங்கினர்.
மாறுவேடம் ,மயிலாட்டம், நாட்டுப்புறப் பாடல் நடனம், எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம் என்னும் பேச்சு, மாரல் ஸ்பீச் இன் இங்கிலீஷ், பூமி படும் பாடு நாடகம், பெரியார் பாடல் பாடுதல், நகைச்சுவை நடனம், மவுன மொழி நாடகம் என இன்னும் பல கலை நிகழ்ச்சிகளை கொண்டு கண்ணையும், மனதையும் கவரும் வகையில் அழகாக நடைபெறச் செய்தனர்.
பெற்றோர்களும், பார்வையாளர்களும் நிகழ்ச்சியை மகிழ்வுடன் கண்டு களித்தனர்.
பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தினை பிடித்த மாணவர்களுக்கும் 100% வருகை புரிந்த மாண வர்களுக்கும், தினமும் பள்ளிக்கு அனைத்து விதத்திலும் நேர்த்தி உடன் வருகை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளியின் ஒன்பது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றி தொடர்ந்து பணிபுரிந்து வரும் மூன்று ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டன.
பள்ளியின் ஆசிரியர் அ.கியூரி நன்றியுரை வழங்க இனிதே விழா முடிவு பெற்றது.
No comments:
Post a Comment