1543 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையங்கள் நவீன மயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

1543 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையங்கள் நவீன மயம்

சென்னை, பிப். 28- ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப் புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 

திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று  பேருந்து நிலையங்கள் ரூ.1543  கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்பட்ட உள்ளன. வணிக வளாகங்கள், அடுக்கு மாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மூன்று பேருந்து முனையங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.

திருவான்மியூர் பேருந்து முனையம் ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பேருந்து முனையம் ரூ. 610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பேருந்து முனையம் ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்பட உள்ளன. மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி  நிற்காத வகையிலும், மழைநீர் வடிகால் வசதியுடனும் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment