சென்னை, பிப்.5- மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட் டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச் சர் குழு அனுப்பிவைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளார்.
கடந்த சில நாட்களாக தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த 1.3 லட்சம் ஏக்கர் நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இரு அமைச்சர்களுடன் வேளாண்மைத் துறைச் செயலாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் இந்தக் கள ஆய்வினை மேற் கொண்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேசி விபரங்களைப் பெற அறிவுறுத்தியுள்ளேன். 6-2-2023 அன்று இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, சேத விப ரங்களை அறிந்து, மழை யினால் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு பயிர்காப்பீடுத் தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித் துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment