புதுடில்லி பிப்.18 இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பு சற்றேறக்குறைய 100 என்ற அளவிலே பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு நேற்று (17.2.2023) 102 ஆக உயர்ந்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. அதாவது சற்று உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 113 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,835 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 12 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று கருநாடகாவில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,757 ஆக உயர்ந் துள்ளது.
தமிழ்நாட்டில்...
தமிழ்நாட்டில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3 பேருக்கும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் நீலகிரியில் தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறி யப்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மாநிலத்தில், கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 47 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment