நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல்: பகல் 11 மணி நிலவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல்: பகல் 11 மணி நிலவரம்

மேகாலயா, நாகாலாந்தில் சட்டப்பேரவை தேர் தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27.2.2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர். மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 35.76 சதவிகிதமும் மேகால யாவில் 26.07 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

No comments:

Post a Comment