11,409 காலி இடங்கள் : எஸ்.எஸ்.சி. தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 20, 2023

11,409 காலி இடங்கள் : எஸ்.எஸ்.சி. தேர்வு

புதுடில்லி, பிப்.20 ஒன்றிய அரசுப் பணிகளில் உள்ள 11,409 காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ். எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசுத் துறை களில் காலியாக உள்ள 11,409 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) கடந்த மாதம் வெளியிட்டது. 

அதன்படி மேற்கண்ட பணி களுக்கான தேர்வு கணினி வழியில் ஏப்ரல் மாதம் 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்டத் தேர்வில் 40 வினாக்களும், 2-ஆம் கட்டத் தேர்வில் 50 வினாக்களும் என மொத்தம் 90 வினாக்கள் கேட் கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் அதிகபட்சம் 3 மதிப்பெண் வழங் கப்படும். இதற்கு தகுதியானவர்கள் https://ssc.nic.in  என்ற இணைய தளம் வாயிலாக பிப்ரவரி 17ஆ-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டு மென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதி நாளில் இணைய தளம் முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமத் துக்குள்ளாகினர். இதனால் விண் ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 24ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த கூடுதல் விவரங்களுக்கு லீttஜீs://ssநீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற் கிடையே இனிவரும் எஸ்.எஸ்.சி. போட்டித் தேர்வுகள் தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment