கடலூர், பிப். 24- கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.2.2023 செவ் வாய் மாலை 6 முதல் 8.30 மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தண்டபாணி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், கடலூர் நகர செயலாளர் சின்னதுரை, வடலூர் இந்திரஜித், இந்திரா நகர் பாஸ்கர், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் கனக ராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம நாதன், கடலூர் ஒன்றிய செயலாளர் தர்மன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் தமிழ் ஏந்தி, கலைச்செல்வி, திராவிட மணி, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, கடலூர் நூலகர் மாதவன், மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல் ஆகியோர் செயல்பாட்டு உரை வழங்கினார்கள்.
தீர்மானங்கள்:
1. கடலூரில் மார்ச் 10 அன்று நடக்க உள்ள ஈரோடு தொடங்கி கடலூர் வரை தமிழர் தலைவர் தலைமையில் நடை பெறும் பிரச்சார பயண நிறைவு விழா நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க மாநாடாக நடத்துவது என்றும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களை பங்கேற்க செய்வது என்றும் முடி வெடுக்கப்பட்டது
2. மாவட்டம் முழுவதும் சனாதன எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டங்கள் 30 ஊர்களில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட் டது முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment