பெரியார் 1000 - மாணவர்களுக்கு பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

பெரியார் 1000 - மாணவர்களுக்கு பரிசளிப்பு

பெரியார் 1000 வினா-விடை போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நகர தலைவர் கோ.தங்கராசன் பதக்கங்களை வழங்கினார். நகர பகுத்தறி வாளர் கழக செயலாளர் நாகராஜன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சொர்ணமுகியிடம் மாவட்ட செயலாளர் மாணிக்கம் பெரியார் படத்தை வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பெரியார் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தெய்வானை, மஞ்சுளா, வள்ளி, பாரதிதேவி, மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment