கிருஷ்ணகிரி, பிப். 25- பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் குரு பரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சத் தியமூர்த்திக்கு மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
பரிசு பெற்ற மாணவர்களுக்கு நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் நாகராசன் பதக்கங்களை வழங் கினார். கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ.தங்கராசன் தலைமை ஆசிரி யரிடம் பள்ளிக்கு பெரியார் படத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் இலட்சுமி, பெரியார் ஆயிரம் தேர்வை ஒருங்கிணைத்து நடத்திய ஆசிரியர் மதலை முத்து, முதுகலை ஆசிரியர் ரோஜம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment