அமைந்தகரை, பிப். 20- பெரியார் -1000 வினா- விடை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் 17-.2.-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.-00 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னவெள்ளத்தாய் அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் தலைமையில் தமிழாசிரி யர் ராவணன் வரவேற்பு ரையுடன் துவங்கியது.
நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வெங்கடேசன், தென் சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவர் மு. இரா.மாணிக்கம், அயன்புரம் துரைராஜ் ஆகியோர் மாணவிகளிடம் பெரியாரின் தன்னலமற்ற சேவையினை எடுத்துரைத்தனர்.பின் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும் புத்தகமும் பரிசுத்தொகையும் அளித்து மகிழ்ந்தனர்.
நிகழ்வில் ஆவடி மாவட்ட துணை செய லாளர் பூவை க.தமிழ்ச் செல்வன் ஆசிரியர்கள் பானுமதி, மெர்லி, பிரேமா, விமலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment