சென்னை, பிப். 1- தமிழ்நாட்டின் முன்னணி மின் வாகன (EV)தொழில்நுட்ப நிறுவனமாகிய கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் லிமிடெட், குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரான், மிலன், பிஜினெஸ் ஆகிய மூன்று அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இவற்றின் விற்பனையை முடுக்கிவிட, அடுத்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்கள், நடுத்தர நகரங்களில் ரூ. 100 கோடி முதலீட்டில் 150 விற்பனை மற்றும் சேவை மய்யங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, கேலிபர் நிறுவனம்.
தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மண்டல இணை இயக்குநர் என்.இளங்கோவன், முனைவர் என்.பரசுராமன், ஆகியோர் குவாண்டம் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தினர். இந்த நிகழ்வில் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் சுக்கப்பள்ளி ராமகிருஷ்ண பிரசாத், கேலிபர் கிரீன் வெஹிகிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment