பாராட்டுகள்-உலக டேபிள் டென்னிஸ்: கழக ஆர்வலர் எத்திராஜ் வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

பாராட்டுகள்-உலக டேபிள் டென்னிஸ்: கழக ஆர்வலர் எத்திராஜ் வெற்றி

சென்னை, ஜன. 30- விளையாட்டில் சாதிப்பதற்கு வயது எப்போதும் ஒரு தடை இல்லை என்பதை பலரும் நிரூபித்து வருகின்றனர். ஒமன் நாட்டின் மஸ்கட் நகரில் உலக அளவிலான மாஸ்டர்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப் பட்டன. இது 69 நாடுகளிலுள்ள 40 வயது முதல் 90 வயது வரையுள்ள  1600க்கும் அதிகமான வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொண்ட உலக விளையாட்டுத் திருவிழாவாக மாறியது.  சீனா, கொலம்பியா, டென் மார்க், இங்கிலாந்து, ஸ்பென், ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரேசில், கனடா, பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, ஈரான், ஜப்பான், ஒமன், போலந்து, சிங்கப்பூர், சுவீடன் நாடுகளில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் சென்னையைச் சேர்ந்த எத்திராஜன் கலந்துகொண்டனர்.  மாஸ்டர் டேபிள் டென்னிஸ் தொடரின் மாநில அளவிலான போட்டியில் வாகையர் பட்டத்தை வென்ற, இவர் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். பள்ளிச் சிறுவர்களுக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் பயிற்சியும் அளித்து வருவதால் வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றவர் இவர். தனது பயணத்தின் நோக்கம், வெளி நாட்டு வீரர்களுடன் விளையாடிய அனுபவம், அடுத்த இலக்கு உள்ளிட்டவை பற்றி பகிர்ந்து கொண்டார்.

உலக அளவில்டேபிள் டென்னிஸ் விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள ஒமன் நாட்டு பயணம் மிகவும் பயனுள்ள தாக அமைந்தது. அதிவேக (Fastest)    பந்து விளையாட்டில்முதலிடத்தை வகிக்கும் டேபிள் டென்னிஸ் உலக அளவில் மிகவும் பிரலமான விளையாட் டாக எப்படியெல்லாம் வளர்ச்சி பெற் றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இது எனது வெளிநாட்டு முதல் பயணம் மட்டுமல்ல உலக அளவில் கலந்து கொண்ட குவைத், குரோசியா, போலந்து வீரர் களை தகுதி சுற்றில் எதிர் கொண்டேன்.  வெளிநாட்டு வீரர்கள் வேகத்தில் அசத்தினர். வங்கி ஊழியர்களுக்கான மாநிலம், அகில இந்திய தொடர்களின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் குழு ஆட்டங்களில் தொடர்ந்து பல்லாண்டு காலம் வாகையர் பட்டத்தையும் முதலி டத்தையும் தக்க வைத்தது எனக்கு பக்க பலமாக இருந்தது.  பன்னாட்டு மாஸ் டர் தொடரில் நான் இடம் பிடித்திருந்த குழுவில் 2 ஆவது இடம் பிடித்து முக்கிய சுற்றுக்கு  (Main Draw) தகுதி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறேன். தகுதிச் சுற்றில் போலந்து வீரரி டம் வெற்றி வாய்ப்பை நூலிழையில் இழந்தாலும்  உலகத் தரவரிசை பட்டியலில் 64 இடங்களுக்குள் முதல்முறையாக இடம் பிடித்திருப்பதை மேலும் பெருமையாக கருதுகிறேன். இந்தத் தொடரில் பங்கேற்றவர்கள் 95 விழுக்காட்டினர் தொழில் முறை விளையாட்டு வீரர்கள். என்னைப் போன்று ஓரிருவர் மட்டுமே பயிற்சியாளராக இருந்து கொண்டு போட்டிகளில் விளையாடினோம். பயிற்சியாளராக மாறிய பிறகு முதன்முதலாக பன்னாட்டு அளவில் விளையாட்டு வீரராக களத்தில் இறங்கி விளையாடியது மேலும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து உலக அளவில்நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்து இருக்கிறேன். 

உலக டேபிள் டென்னிஸ் கூட்ட மைப்பில் (ITTF) சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராகிய நான்,தொடர்ந்து முயற்சி கள் மேற்கொண்டு மேலும் பல மாண வர்களை டேபிள் டென்னிஸ் விளை யாட்டில் ஈடுபடுத்துவேன்.

ஒன்றிய, மாநில அரசுகளும் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பும் வணிக நிறுவனங்களும் தனியார் கம்பெனிகளும் வீரர்களுக்கும் பயிற்சியாளர் களுக்கும் தாராளமாக ஸ்பான்சர் செய்ய முன்வர வேண்டும். தமிழ் நாட்டில் ஏராளமான மாணவர்கள் டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். பயிற்சி பங்கேற்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தங்களை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள பலரால் முடியவில்லை. இதனால் விளையாட் டைத் தொடர்வதில்லை. போட்டிகளிலும் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.  விளையாட்டு மேம் பாட்டு ஆணைய மும் ஒன்றிய, மாநில அரசுகளும் முழு மையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தால் மாஸ்டர் தொடர் மட்டுமல்ல, டேபிள் டென்னிஸ் விளை யாட்டில் சீனா, கொரியா, தாய்லாந்து, ஜப்பான், போலந்து, கனடா, சுவிட்சர் லாந்து போன்ற நாடுகளுக்கு இணை யாக உருவாக முடியும். 150 நாடுக ளுக்குமேலாக விளையாடும் டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்கு உலக அளவில் அதிகமுக்கியத்துவம் அளிக் கப்படுவதை ஒமன் நாட்டில் நடை பெற்றபோட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தியாவும் வரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை உற்சாகப் படுத்தவேண்டும். அப்போதுதான் வெளிநாட்டு வீரர்க ளுக்கு இணையாக நமது வீரர்களும் முழுமையாக ஆளுமை செலுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment