தாம்பரம், ஜன. 30- 28.1.2023 அன்று மாலை 5 மணிக்கு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து ஒருங்கிணைத்த சிலம்பம் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி குன்றத்தூர் கரைமா நகர் அண்ணல் அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் தலைமை தாங்கினார். வருகை புரிந்த அனைவரையும் கரைமாநகர் பிரதாப் வரவேற்று பேசினார் அதன் பின் பெரியார் வீரவிளையாட்டு கழகத்தின் நோக்கம் குறித்து சிலம்பாட்டத்தின் தோற்றம், வரலாறு அவையின் கடந்த வளர்ச்சி, சிலம்பத்தினால் ஏற் படும் நன்மைகள், எதிர்காலத்தில் பெரியார் வீரவிளையாட்டு கழகத்தின் செயல்பாடுகள் குறித்து திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பேசிய போது மாணவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் உன்னிப்பாக கவ னித்தனர். அதனைத்தொடர்ந்து வருகை புரிந்திருந்த அனைவ ருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் குன்றத்தூர் ஒன்றிய கழக தலைவர் ப.கண்ணதாசன் மற்றும் தாம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளார் தே.சுரேஷ் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பித்தனர். மாணவர்களுக்கான சிலம்பம் பயிற்சியினை குன்றத் தூர் நகர் மன்ற தலைவர்
கோ.சத்தியமூர்த்தி தொடங்கி வைத் ததுடன் மாணவர்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
இறுதியாக வருகை புரிந்த அனைவருக்கும் தாம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தே.சுரேஷ் நன்றி கூறிய பின் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேல் சிலம்பம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகா சிலம்பாட் டக்குழுவில் இருந்து தோழர் இராகுல் பயிற்சியாளராக மாணவர்களை வழிநடத்தி னார்.
நிகழ்வில் திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் இர.சிவசாமி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண் முகப்பிரியன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், குன்றத்தூர் ஒன்றிய திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் பைந்தமிழன், 20ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ம.மதன், 19ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அசோக் 7ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர், 20 ஆவது வார்டு மேனாள் நகர்மன்ற உறுப்பினர் சிறீதர், 20 ஆவது வார்டு திமுக செயலாளார் பிரேம்குமார், தாம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.தினேஷ்குமார், வட சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரா.சதீஷ், வட சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நா.பார்த்திபன், வட சென்னை மகளிரணி பொறுப்பாளர் த.மரகதமணி, குணசேகரன், ஆ.கருப்பையா, சந்திரசேகர், பூவிருந்தவல்லி தமிழ்ச்செல்வன், இளமாறன், சாமிநாதன், வடிவேல், கார்த்திக், முத்துரத் தினம், விவேக், ராபர்ட்(எ) தமிழ்வாணன், வசந்தகுமார் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment