பார்ப்பானைப் பார்த்து நீ ஏன் பொறாமைப்படுகிறாய்.
அவன் கட்டுப்பாடான சமூகத்தைச் சேர்ந்தவன்.
நீ கட்டுப்பாட்டை வெறுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.
அவன் கட்டுப்பாட்டுக்கு உழைப்பவன்.
நீ கட்டுப்பாட்டை உடைப்பதற்குக் கூலி வாங்குபவன்.
அவன் இனநலத்தைப் பார்ப்பவன்.
நீ சுயநலத்தைப் பார்ப்பவன்.
அவன் மதத்தில் அவன் ஜாதி உயர்வு.
உன் மதத்தில் உன் ஜாதி தாழ்வு.
மனித சமுதாயத்திற்கு சமத்துவமுள்ள மதத்தை அவன் உதறித் தள்ளுகிறான்.
நீ சமத்துவமில்லாத மதத்தைக் கட்டித் தழுவுகிறாய். அதற்கு அடிமையாய் இருகிறாய்.
உன் மொழியை மிலேச்ச மொழி என்று அவன் வைதிக காரியங்களில் ஒதுக்கித் தள்ளுகிறான்.
நீ அவன் மொழியை வைதிகத்துக்கும், மற்றும் உன் பெருமைக்கும், புகழுக்கும் பயன்படுத்திக் கொள்ளுகிறாய்.
மேலும், உனக்கு இனம் இல்லை. இனப்பற்று இல்லை. சமயம் இல்லை. சமயப்பற்று இல்லை. மொழிப்பற்று இல்லை.
உன்னைப்பற்றிய கலை இல்லை. இலக்கியம்இல்லை.
நீ அவனுடன் போட்டி போட்டு என்ன செய்ய முடியும். இவைகளை மாற்றிக் கொள்ள உன் மானம் உன்னை என்றைக்காவது தூண்டுமா?
- குடிஅரசு - பெட்டிச்செய்தி - 26.02.1944
No comments:
Post a Comment