உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழுஅமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழுஅமைப்பு

புதுடில்லி, ஜன. 26- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டில்லி உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் (24.1.2023) பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திர சூட், 'ஆங்கிலத்தில் உள்ள சட் டங்களை 99 சதவீத மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. 

மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவ சியம். இதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. 

இந்த குழுவில் கருநாடக உயர்நீதி மன்றம் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.அய்.டி. தர்மிஸ்தா, அய்.அய்.டி. டில்லியை சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக். ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், அகாமி நிறுவனத்தை சேர்ந்த சுப்ரியா சங்கரன் ஆகியோர் இடம்பெற்று உள் ளனர்.' என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment