ஆண்டிப்பட்டி, ஜன. 13- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.1.2023 அன்று ஆண்டிபட்டி முத்துமாரி யம்மன் கோவில் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட தலைவர் ரகு நாகநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செய லாளர் மதுரை செல்வம் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் கருப்புச் சட்டை நடராஜன், பொதுக் குழு உறுப்பினர்கள் போடி பேபி சாந்தா தேவி, மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன், பெரிய குளம் அன்புக்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போடி பெரியார் லெனின், சுருளி ராஜ், முருகானந்தன், சர வணன், ஆண்டிபட்டி ஸ்டார் நாகராஜன், ஆண்டிச்சாமி, கண்ணன், ஜோதி, அன்னக்கொடி, தேனி முத்துசாமி, வெங்க டேசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், கண்டம னூர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தீர்மானம் 1: 22.2.23 அன்று வருகை தரும் தமிழர் தலைவர் கலந்து கொள்ளும் பிரச்சாரப் பயண கூட்டத்தை ஆண் டிபட்டியில் சிறப்பாக நடத்துவது என்றும்
தீர்மானம் 2: பிரச்சார பெரும் பயண வழிச் செலவை மாவட்ட கழ கம் ஏற்றுக்கொள்வது என்றும்
தீர்மானம் 3: தேனி மாவட்டம் கண்டமனூர் ஒன்றிய திராவிட ர்கழக செயலாளர் கண்டமனூர் பிரபுவை நியமிப்பது என் றும் முடிவு செய்யப் பட்டது.
No comments:
Post a Comment